இம்மாதத்தில் இரண்டாவது முறையாக அதிக பணத்தை அச்சிட்டது மத்திய வங்கி !

இலங்கை மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை 33.31 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது.

இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 152.21 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 465.89 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது.