பாராளுமன்றத்தில் உணவு மற்றும் எழுதுபொருள் பாவனையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல்.

நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தவரை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் எழுதுபொருள் பாவனையை மட்டுப்படுத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்றத்தில் ஒரு நாளைக்கு தயாரிக்கப்படும் உணவுகளின் எண்ணிக்கை ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எழுதுபொருட்களின் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.