நாளை (12) மீண்டும் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய சுயேட்சைக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த போதிலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முகங்கொடுத்து சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை என அறியமுடிகின்றது.

இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான பிரேரணைகள் சுயேட்சைக் குழுவினால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி தரப்பில் திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை (12) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதி மாத்திரம் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.