15 முதல் 25 பேர் கொண்ட அமைச்சரவை?

15 முதல் 25 பேர் கொண்ட அமைச்சரவை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட உள்ளதாகவும், பல பரிச்சயமான மற்றும் சிரேஷ்ட முகங்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும்  தெரியவருகின்றது.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் புதிய அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளனர்.