(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் அம்பாறை மாவட்ட நல்லிணக்க நிலையம், அமெரிக்க தூதரகத்தால் வழங்கப்படும் சிறிய மற்றும் வலிமையான மானியத் திட்டம் தொடர்பான தெளிவூட்டல் வழங்கும் விசேட தகவல் அமர்வு அண்மையில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில் பல்வேறுபட்ட கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் மகளிர் அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.