ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது

( அஸ்ஹர் இப்றாஹிம்)

அரசாங்க தகவல் திணைக்களத்தால் 2021 ஆம் ஆண்டுக்காக வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக அறிவித்துள்ளார்.
வழங்கப்படவுள்ள புதிய ஊடகவியலாளர் அடையாள அட்டை 2022 , 2023 , 2024 ஆகிய 3 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.