நுவரெலியாவில் அதிபர், ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர்

(தலவாக்கலை பி.கேதீஸ்)

நுவரெலியா பிரதேச அதிபர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு எதிராகவும், இன்று மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பை கண்டித்தும் நுவரெலியா நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். நுவரெலியா பிரதான தபால் நிலையத்திற்கு அருகாமையில் இன்று (8) வெள்ளிக்கிழமை பிற்பகல் அணிதிரண்ட அதிபர்கள், ஆசிரியர்கள் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.