மட்டக்களப்பு அமிர்தகழி பிரபல கலைஞர் நிலாமதி பிச்சையப்பா காலமானார்..

(அஸ்ஹர் இப்றாஹிம்)

முழு உலகமும் அறியப்பட்ட சிறந்த நாடறிந்த பாடகியும்,நடிகையுமான பிரபல கலைஞர் நிலாமதி பிச்சையப்பா காலமானார்
இவர் .பல்வேறு நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி இலங்கைக்கு பெருமை சேர்த்தவர்.
 ஆயிரக்கணக்கான பாடல்களை  பாடியுள்ளதுடன் தொலைக்காட்சி நாடகங்களிலும் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் தேசியக் கல்லூரியின் ஆசிரியையாக கடமையாற்றிய இவர் பல்கலை வேந்தர் சிறீதர் பிச்சையப்பாவின் துணைவியாவார்.
நிலாமதி பிச்சையப்பா மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது