அம்பாறை ஹாடி சிரேஸ்ட உயர்தொழில்நுட்ப நிறுவன மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த அரசுக்கெதிரான அம்பாறையில் ஆர்ப்பாட்டம்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை ஹாடி சிரேஸ்ட உயர்தொழில்நுட்ப நிறுவன மாணவர் ஒன்றியம் ஒழுங்கு செய்திருந்த அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் அம்பாறை நகரில் இடம்பெற்றது.
அம்பாறை – கல்முனை வீதியினை மறித்த இவர்கள் சுலோகங்களை ஏந்திய வண்ணம் கரகோசம் செய்து ஜனாதிபதிக்கு எதிராக கோசம் எழுப்பி வீதியில் வலம் வந்தனர். இதனால் போக்குவரத்திற்கும் சிறிது நேரம் இடைஞ்சல் ஏற்பட்டது,