சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து நாடு திரும்பினார் நந்தலால் வீரசிங்க !

மத்திய வங்கியின் அடுத்த ஆளுநராக தெரிவு செய்யப்பட்டுள்ள கலாநிதி நந்தலால் வீரசிங்க சற்று முன்னர் அவுஸ்ரேலியாவிலிருந்து இலங்கை திரும்பியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நந்தலால் வீரசிங்க பரிந்துரைக்கப்பட்ட நிலையில் அவர் இன்று நியமனத்தை பெற்றுக்கொள்வார் என கூறப்படுகின்றது.

இதற்கிடையில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேற முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட கப்ராலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது