இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2.4% ஆக குறையும் – ஆசிய அபிவிருத்தி வங்கி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 2.4% ஆக குறையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி கணித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட 1.3 சதவீதம் சரிவாகும். 2021 இல், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.7 சதவீதமாக இருந்தது.

கடன்கள், குறைந்த வெளிநாட்டு கையிருப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவை வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்படுகின்றது.

இதேவேளை அடுத்த ஆண்டில் 2.5% ஆக சிறிதளவு முன்னேற்றம் காணும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி குறிப்பிட்டுள்ளது.