எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை – ஜனாதிபதிக்கு அறிவித்தது மைத்திரி தரப்பு!

எந்தவொரு அமைச்சுப் பதவியையும் ஏற்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று(செவ்வாய்கிழமை) முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றிந்தது.

இதன்போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுகுறித்து அறிவிக்கப்பட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.