இராணுவ தளபதி பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத பல மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆயுததாரிகள்  படையினர் என இராணுவம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் துஷ்பிரயோகம் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இராணுவத் தளபதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்த பொலிஸ்மா அதிபர்  உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.

இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ள வீதித் தடையை நெருங்கும் போது தவறாக நடந்து கொண்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்தி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை இராணுவத் தளபதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் மா அதிபர் இராணுவத் தளபதிக்கு அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன
வெகுஜன ஊடக இயக்குனர்
இராணுவ தலைமையகம்