மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைப்பு !

இன்று (05) அறிவிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நாணயக் கொள்கை மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அத்தோடு இன்று செவ்வாய்க்கிழமைநடைபெறவிருந்த ஊடகவியலாளர் சந்திப்பும் பிற்போடப்பட்டுள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இந்த செய்திக்குறிப்பு மற்றும் செய்தியாளர் சந்திப்பின் தேதி குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிக்கையில் தெரிவித்துள்ளது.