ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை

போராட்டங்கள் காரணமாக ஜனாதிபதி பதவி விலக வேண்டிய அவசியமில்லை என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளதாகவும், அதற்கமைவாக ஜனாதிபதி செயற்படுவார் எனவும், தனக்கும் மக்கள் சக்தி இருப்பதாகவும், அதன் காரணமாகவே தான் இன்னமும் இங்கு தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்