ஊரடங்கு சட்டம் தளர்வு !

நாடளாவிய ரீதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை 6 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை ) காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது .

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது .

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது .

எவ்வாறாயினும், ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் நாட்டில் அவசரகால சட்டம் தொடர்ந்தும் அமுலில் காணப்படுகின்றது .