அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர்; இன்று பதவியேற்கின்றது புதிய அமைச்சரவை?; மஹிந்த தொடர்ந்தும் பதவியில் நீடிப்பார்

அமைச்சர்கள் அனைவரும் தங்களது அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நாளைய தினம் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் வலுவடைந்துள்ள நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பதவியில் நீடிப்பார் எனவும் ஏனைய அமைச்சரவை அமைச்சர்களின் இராஜினாமா கடிதங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.