பேராதனையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் !

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசாங்கத்திற்கு எதிராக பல கோணங்களில் ஆர்ப்பாட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றது. அந்த வகையில் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பேராதனை – கலஹா சந்தி வரை மாணவர்கள் பேரணியாக செல்ல முற்பட்ட போது இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் ஏற்பட்ட முறுகள் நிலையை கட்டுப்படுத்துவற்கு கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.