சமூக பாதுகாப்பு சபை ஊடாக மாணவன் கௌரவிப்பு

(ஹஸ்பர்)

தம்பலகாமம் பிரதேச செயலக ஏற்பாட்டில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஊடாக தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த தி/குளக்கோட்டன் தமிழ் வித்தியாலய மாணவன் இன்று (01) கௌரவிக்கப்பட்டார்.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இக்கௌரவிப்பாக பிரதிலாப காசோலையாக ரூபா 5000 வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த காசோலையினை திருகோணமலை மறை மாவட்ட ஆயர் பேரட்திரு கலாநிதி நோயல் இமானுவேல் வழங்கி வைத்தார்.
இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், சமூக சேவை உத்தியோகத்தர் பி.சுதன், சமூக பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பாளர் பா.சஜீகா,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் தங்கரூபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் “சுரக்கும்” திட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் முதற் தடவையாக முழுமையான தொகையை செலுத்தி அங்கத்தவராக இணைந்தவரை பாராட்டும் முகமாக தவணைப் பணம் செலுத்தும் புத்தகமும் பிரதேச செயலாளரால் இதன் போது வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.