அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு?

அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர் ஆகியோரின் வீடுகளுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று இரவு (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

அத்துடன், வர்த்தக அமைச்சர் பந்துல வீட்டையும் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளதாக தெரிவக்கப்படுகிறது.

இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் நிலையில் அமைச்சர்களின் வீடுகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.