அம்பாறை மாவட்ட செவிபுலனற்றோர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாறையே வெற்றி வாகை சூடியது

(சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்)

அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை (26) சாய்ந்தமருது வொலிவோரியன் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இச் சுற்றுப்போட்டி ஆனது அம்பாறை மாவட்ட அணி, மட்டக்களப்பு மாவட்ட அணி, திருகோணமலை மாவட்ட அணி என செவிப்புலனற்றோர் அமைப்புக்கள் மூன்று அணிகளாக கலந்து கொண்டது.

இறுதிச்சுற்றுப்போட்டி மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் அமைப்புக்கும் அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் அமைப்புக்கும் இடையே நடைபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலனற்றோர் அணி 10 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் வெற்றி இழக்காக அம்பாறை மாவட்ட அணிக்கு 87 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட செவிப்புலனற்றோர் அமைப்பு 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியது..

இத் தொடரின் சிறந்த ஆட்ட நாயகனாக ஹுசைன் ரஸ்வி, சிறந்த பந்துவீச்சாளராக தெளபீக்கும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.