மூதூரில் தாய் சேய் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு

(ஹஸ்பர்)

திருகோணமலை,மூதூர் சுகாதார பிரிவிற்கு உட்பட்ட “கேனிக்காடு” பகுதியில்-துபாய் நாட்டைச் சேர்ந்த அகீல் அவர்களினால் சட்டத்தரணி எம்.எல்.பஜாத் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க நிர்மாணிக்கப்பட்ட தாய்-சேய் பராமரிப்பு நிலையம் இன்று (29-03-2022) மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா அவர்களிடம் உத்தியகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மூதூர் பிரதேச சபை தவிசாளர் அரூஸ்,தோப்பூர் வைத்தியசாலை வைத்தியர் டொக்டர் கஸ்ஸாலி, டொக்டர் அஞ்சலி, வட்டார உறுப்பினர் பஃஜித், பாடசாலை அதிபர்களான ரஸீன் , ஹில்மி , கேனிக்கடு RDS தலைவர் மனாஸிர், பிரதேச Development Officer,மூதூர் சுகாதார பனிமனை உத்தியோகத்தர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஆசிரியர்கள், உலமாக்கள், பிரதேசவாசிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.