ரணில் பிரதமரா அப்படியொன்றும் இல்லை.

நாட்டின் அடுத்த பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை முன்னிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தகைய ஒருவரை இலங்கையின் பிரதமராக தெரிவு செய்யும் அளவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள எவரும் விவேகமற்றவர்கள் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றிலிருந்து வந்தாலும், குறைந்தபட்சம் ஒரு ஆசனத்தையாவது பாராளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல், தனது தோல்வியை நிரூபிப்பதாக அபேகுணவர்தன மேலும் தெரிவித்தார்.

SLPP பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மேலும் தெரிவிக்கையில், மிகவும் பொருத்தமான நபர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ. புதிய பிரதமரைத் தேட வேண்டிய அவசியம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.