பேசாலையில் நீண்ட தினங்களுக்கு பிறகு சதொசவில் ஒரு கிலோ சீனியும் ஒரு அங்கர் பக்கட்டும்…

(வாஸ் கூஞ்ஞ) 

மன்னார் பேசாலை சதொச வியாபார நிலைய கிளைக்கு நீண்ட தினங்களுக்குப் பின் சீனி மற்றும் அங்கர் மா பக்கற் வந்ததும் திங்கள் கிழமை (28.03.2022) இவற்றை பெறுவதற்கு காலை முதல் மக்கள் முன்டியடித்துக் கொண்டு பெறுவதில் ஆர்வம் காட்டி வருவதை படத்தில் காணலாம்.

மணிக்கணக்கில் இவ் பொருளை பெறுவதற்கு நீண்ட கியூவில் நின்றபோதும் இவர்களுக்கு ஒரு கிலோ சீனியும் ஒரு அங்கர் பக்கற் மா மட்டுமே வழங்கப்பட்டது.

இனி இந்த பொருள் எத்தனை நாளைக்குப் பிறகு வருமோ என்ற கேள்வியில் நுகர்வோர் கேட்டுச் சென்றதும் கேட்கக்கூடியதாக இருந்தது