களுதாவளை பிரதேச சபையில் சர்சை.

மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 49வது அமர்வு 24.03.2022 அன்று தவிசாளர் ஞா.யோகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது சர்சை வெடித்தது.

சபையின் 49வது அமர்விற்கு அமரத்துவமடைந்த உறுப்பினர்களான தி.தேவறஞ்சன் மற்றும் ம.இளங்கோ ஆகியோரின் வெற்றிடத்துக்கு இ.வேணுராஜ் மற்றும் த.ரவீந்திரன் ஆகியோர் சபைக்கு புதிதாக வருகை தந்தனர்.

இதன் போது சுயோட்சை குழு சார்பாக வருகை தந்த உறுப்பினர் த.ரவீந்திரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் தமது சுயோட்சை குழு முட்மு கொடுத்ததன் காரணமாகவே தவிசாளர் பதவியில் இருப்பதாக சபைக்கு கூற அதற்கு பதிலழித்த உறுப்பினர் ச.கணேசநாதன் அவர்கள் தமது கட்சியின் இரு உறுப்பினர்களின் நடுநிலைமை காரணமாக தவிசாளர் பதவி கிடைத்தாகவும் விளக்களித்தார். இதன் போது தவிசாளரினால் தனது தத்துவத்தின்படியும் பிரதேச சபைகள் சட்டத்தின் படியும் பிழையான வாதத்தினை முன்வைத்ததன் காரணமாக மூன்று மாதம் சபை கூட்டத்திற்கு பிரசன்னமாகாது இருப்பதற்கு சபையிடம் அனுமதி கோரிய போது வாத பிரதிவாதங்களுக்கு பின்பு சபை உறுப்பினர்களினால் பரிரங்க மன்னிப்பு கோருமாறு த.ரவீந்திரன் உறுப்பினர் அவர்களுக்கு கோரியதற்கு அமைவாக பகிரங்க மன்னிப்பு கோரியமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சபை அமர்வின் போது பிரதி தவிசாளர் திருமதி க.றஞ்சினி அவர்கள் விலைவாசிக்கு எதிராக தனது கண்டன தீர்மானத்தை அரசு எதிராக முன்வைத்தார். மேலும் சி.காண்டீபன் உறுப்பினர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் சபையினால் உற்பத்தி செய்யப்படும் சேதன பசளைக்கு மக்களின் நலன் கருதி விலை ஏற்ற வேண்டாம் எனவும் விவசாயிகளின் நலன் சார்ந்து செயற்படுமாறு வேண்டிக்கொண்டார்.

Translation letter