மாற்றாற்றல் பெண் சிறுமி பாக்குநீரில் சாதனைப் படைத்துள்ளார்

(வாஸ் கூஞ்ஞ)

இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை 13 மணி நேரத்தில் கடலில் நீந்தி வந்து முதன்முதலில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி பெண் நினைவு பரிசு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழக டிஜிபி சைலேந்திரபாபு

இந்தியா – இலங்கை இடையிலான நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு மும்பையைச் சேர்ந்த ரச்சானா ராய் – மதன் ராய் ஆகிய தம்பதிகளின் மகளான ஜியா ராய் என்ற 13 வயது சிறுமியே இவ் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ் சிறுமியானவள் காது கேளாத வாய் பேசாத ஒரு மாற்றுத்திறனாளியாக இருந்து வந்துள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு குளத்தில் குளிக்கும்போது மாற்றுத்திறனாளியான இவ் சிறுமி ஜியா ராய் நீச்சல் அடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்

இதையடுத்து ஜியா ராய்யின் தந்தையான மதன் ராய் தனது மகளுக்கு நீச்சல் மீது அதிக ஆர்வம் இருப்பதை கண்டு முறையாக பயிற்சி வழங்க முடிவு செய்து கடந்த 3 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை – இந்தியா ஆகிய இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்தோடு மும்பையைச் சேர்ந்த மதன் ராய் என்பவரின் மகள் ஜியா ராய் ஞாயிற்றுக்கிழமை (20.03.2022) இலங்கை தலைமன்னாரில் இருந்து 28.5 கிலோ மீட்டர் தொலைவை 13 மணி நேரத்தில் நீந்தி வந்து தனுஷ்கோடி அடுத்துள்ள அரிசல்முனைப்பகுதியை சென்றடைந்துள்ளார்

மேலும் இதுவரை இலங்கை தலைமன்னாரில் இருந்து அரிச்சல்முனை வரை மாற்றுத்திறனாளி யாருமே நீந்தி வராத நிலையில் முதல் முதலாக மும்பையைச் சேர்ந்த காதுகேளாத வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஜியா ராய் என்பவர் 13 மணி நேரத்தில் கடலில் நீந்தி வந்து சாதனை படைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரை வந்து சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜியா ராய்யை கரையில் இருந்த சுற்றுலா பயணிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்று மாற்றுத்திறனாளி பெண்ணை கைகொடுத்து பாராட்டி யுள்ளனர்.

அத்துடன் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நினைவு பரிசு பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தி பராட்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடலில் நீந்தி வந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இந்திய கடலோர காவல் படை, கடற்படை, மதுரை போலீசார் கடலில் பாதுகாப்பு வழங்கியதோடு கடற்கரைக்கு வந்த பின்னர் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சார்பாக பாதுகாப்பு வழங்கப்பட்டது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு இலங்கை தலைமன்னார் இருந்து அரிசல்முனை வரை பலவிதமான கடல் உயிரினங்கள் வாழகூடிய கடல் பகுதியாக இருப்பதால் பலவித சவால்களை சந்தித்து மாற்றுத்திறனாளி பெண் நீந்தி வந்தது பாராட்டுக்குரிய விஷயம் உள்ளதோடு தற்போது இளைஞர்கள் மத்தியில் கடலில் நீச்சலடிக்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.