திருகோணமலை கந்தளாயில் சமயல் எரிவாயுவை பெற நீண்ட வரிசையில் பொது மக்கள்

(எப்.முபாரக்)

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் சமையல் எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதற்கு இன்று காலை 10.00 மணி முதல் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சமையல் எரிவாயு கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள எரிவாயு கடையில் வழங்கப்பட இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே பொது மக்கள் அங்கு பி.ப 2.00 மணிவரை காத்திருந்தனர்.

சமையல் எரிவாயு வழங்கப்பட இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவல்களை அடுத்து பொது மக்கள் கந்தளாய் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையால் செல்லும் வீதி ஓரத்தில் சிலிண்டர்களை வரிசையாக அடுக்கி வைத்து 2.00 மணிவரையும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

சமையல் எரிவாயு வழங்கப்படுவதற்குரிய ஏற்பாட்டை கந்தளாய் வர்த்தக சம்மேளனத்தினர் செய்தாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு சிறுவர்கள், பெரியவர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள் என பலரும் திரண்டு இருந்தனர்.

சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்கு வருகை தந்த இரண்டு சிறுவர்கள் (சகோதரர்கள்) ஏமாற்றத்துடன் சிலிண்டரை தூக்க இயலாது ஆளுக்கொரு பக்கமாக நீண்ட நேரம் தூக்கிக் கொண்டு சென்றதை எம்மால் காணக் கூடியதாக இருந்தது.