இன்னும் காலம் தாழ்த்தாமல் தொண்டர் ஆசிரியர் நியமனங்களை வழங்குமாறு கோரி திருமலையில் ஆர்ப்பாட்டம்….

(ரவ்பீக் பாயிஸ்)

காலம் கடந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் உரிய நியமனங்களை வழங்குமாறு கோரி தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (21) 12:00 மணி அளவில் திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த தொண்டர் ஆசிரியர்களின் நியமனங்களை வழங்குமாறு வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கடந்த நல்லாட்சி காலத்தில் அரசியல் ரீதியாக பழி வாங்கப்பட்ட எமக்கு நீதி வேண்டும், நிரந்தர ஆசிரியர் நியமனம் வேண்டும், கௌரவ ஆளுநர் அவர்களே அநீதி இழைக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது எப்போது, 2018 ஆம் ஆண்டுக்கு பின்னர் கல்வி கற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதை விட நீண்டகால தொண்டர் ஆசிரியர்களான எமக்கு ஒரு தீர்வை தாருங்கள், கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை எமது நீண்ட கால தொண்டர் ஆசிரியர்களின் சேவையினை கொண்டு தீர்க்க முடியும் மற்றும் வேண்டும் வேண்டும் நிரந்தர நியமனம் வேண்டும் என்ற பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் பதாகைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தொண்டர் ஆசிரியர்களில் ஒருவர்

நாட்டில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வந்த காலகட்டத்தில் பாடசாலைகளின் ஊடாக குறித்த ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தொண்டர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்து இருந்தோம் ஆனால் நிரந்தர வேலைவாய்ப்பு என்று வரும்போது அரசியல் இலாபத்திற்காக சுயநலமாக கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடாத பல ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள விடயமானது கவலைக்குரியது எனவும் இதன்போது தெரிவித்தார்

மேலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தொண்டர் ஆசிரியர்கள் நிரந்தர நியமனத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவ்வாறு அவர்களுக்கு நியமனம் வழங்குவதை விட்டுவிட்டு மாறாக பல்வேறு மாற்று செயற்பாடுகள் முன்னெடுத்து வருவதாகவும் இன்னமும் காலம் தாழ்த்தாமல் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்குமாறும் கௌரவ ஜனாதிபதி மற்றும் பிரதமர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததுடன் குறித்த தொண்டர் ஆசிரியர்களினால் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஒன்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது