எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் டீசல் பெறுவதற்காக காத்திருக்கும் மக்கள்

(க.ருத்திரன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் டீசல் பெறுவதற்காக காத்திருக்கும் நிலை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. பல மணிநேரம் காத்திருந்தும் தமது விவசாயச் செய்கைக்காக உழவு இயந்திரத்திற்கு பயன்படுத்துவதற்கு போதுமான அளவு டீசல் போதாமல் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். டீசலை பெற்றுக்கொள்வதற்காக இரவு,அதிகாலை வேளைகளில் எரிபொருள் நிலையங்களுக்கு சென்று கண் விழித்திருந்து வரிசையில் இடம்பிடித்து பல மணிநேரம் காத்திருந்து டீசலை பெற்றுக்கொளவதாகவும் அது போதியளவாக வழங்க்படவதில்லையென விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் 3000 ரூபாவிற்கே வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

சில இடங்களில் டீசல் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட முண்டியடிப்பினால் அமைதியின்மை ஏற்பட்டது. கிரான் எரிபொருள் நிலையத்தில் அவ்வாறான நிலை காணப்பட்டதினால் பொலிசார் வரவழைக்கப்;பட்டு நிலமையினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

கிரான் எரிபொருள் நிலையத்திற்கு 6600 லீற்றர் கொள்ளவு டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இதேவேளை பிரதேசத்தில் பல ஏக்கர் வயல் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளப்படுவதாகவும் உழவு இயந்திரங்களுக்கு போதியளவு டீசல் தேவையாகவுள்ளதாகவும் தமது ஜீவநோபாய தொழிலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனவே தமக்கு போதியளவு டீசல் வழங்குமாறு அரசை கேட்கின்றனர்.