இலங்கை வருகிறார் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச்செயலாளர் !

epa09628258 Victoria Nuland, Under Secretary of State for Political Affairs, speaks during a hearing of the Senate Foreign Relations to examine US-Russia policy, on Capitol Hill, in Washington, DC, USA, 07 December 2021. EPA-EFE/Alex Brandon / POOL

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் ஆசிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய பசுபிக் கூட்டமைப்பிற்கு, அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பை காட்டும் நோக்கில் இந்த விஜயம் அமையவுள்ளது.

அதன்படி பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலும் புதுடில்லியில் வெளிவிவகார அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடல்களையும், ஆலோசனைகளையும் நடத்தவுள்ளார்.

இந்த விஜயங்களின்போது, சிவில் சமூகம் மற்றும் வர்த்தக தலைவர்களையும் சந்தித்து பொருளாதார கூட்டணியை வலுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

தூதுக்குழுவில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் கொள்கை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி ஆகியோரும் அடங்குவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது