திருமலையின் பிரபல சட்டத்தரணி ஆறுமுகம் ஜெகஜோதி சுகவீனமுற்ற நிலையில் காலமானார்.

(ரவ்பீக் பாயிஸ்)

திருகோணமலையின் பிரபல சட்டத்தரணி ஆறுமுகம் ஜெகஜோதி அவர்கள் சுகவீனமுற்று சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்

இவர் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் 1985 ஆம் ஆண்டு தனது சட்டப் படிப்பை நிறைவு செய்து சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து சட்டத்தரணியாகவும், திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டதுடன்

சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதுடன் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளில் மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்று கொடுத்தவர் என்பதுடன் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள சட்டத்தரணிகளுடன் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்த ஒரு சட்டத்தரணியும் ஆவார்

மேலும் இவர் திருகோணமலை மாவட்ட மூவின மக்களாலும் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சட்டத்தரணியாகவும் திகழ்ந்தவர்

சட்ட உதவி வழக்குகளில் ஏழை எளியவர்களுக்கு சட்ட உதவியாக இலவசமாக வாதாடியவர் என்பதுடன் இவர் 32 வருடங்களுக்கு மேலாக சட்டத் துறையில் மிகவும் சிறப்பாக செய்யபபட்டு திருகோணமலை மேல் நீதிமன்றம் மற்றும் சிவில் மேல் முறையீட்டு நீதிமன்றங்களில் பல வழக்குகளை வெற்றி பெற்று கொடுத்தவர் என்பதுடன் தனது 73-வது வயதில் சுகயீனமுற்ற நிலையில் அருனகிரி வீதியில் அமைந்துள்ள தனது இல்லத்தில் காலமானார்