எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருளை விநியோகிக்கும் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்திடமிருந்து, கொள்கலன்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கொண்டு செல்லும் பௌசர்களுக்கு எரிபொருள் இன்மையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை கனியவள தனியார் பௌசர்கள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இலங்கை கனியவள மொத்த களஞ்சிய முனையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்து கொள்கலன் பௌசர்களும், எரிபொருளைக் கொண்டு செல்லுவதற்கு தயாராக உள்ள நிலையில், இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு அவசியமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.