தாருல் பிஹாம் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது

( அப்துல் பாஸித் )

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட இசங்கணிச்சீமை வட்டாரத்தில் அமைந்துள்ள தாருல் பிஹாம் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம் ஏ றாசிக் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இப் பாலர் பாடசாலையின் ஸ்தாபகரும் அக்கரைப்பற்று பிரதேச சபையின் இசங்கணிச்சீமை வட்டார கௌரவ உறுப்பினருமான ரீ எம் ஐய்யூப் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டார்.

இசங்கணிச்சீமை அல் கமர் வித்தியாலயத்தின் அதிபர் முஹம்மட் தாலிப் அவர்களின் நெறிப்படுத்தலில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் , பாடசாலையின் ஆசிரியர்கள், பாலர் பாடசாலையின் நிர்வாக ஆசிரியர்கள், பாட ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவ மணிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.