தமிழரசுக்கட்சி சிரேஷ்ட உறுப்பினரின் மறைவுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினார் வன்னி எம்.பி. சாள்ஸ் நிர்மலநாதன்

(வாஸ் கூஞ்ஞ)

தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ் உணர்வு கொண்டவராக தமிழரசுக் கட்சியில் இணைந்து தந்தை செல்வாவின் அரசியல் மேடைப் பேச்சாளராக திகழ்ந்த மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுநிலை பாடசாலை அதிபர் ஞானமணி அன்ரன் பச்சேக் தனது 85வது வயதில் இறைபாதம் அடைந்துள்ளார்.

இவரின் மறைவையொட்டி வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் செவ்வாய்கிழமை (08.03.2022) பாராளுமன்றத்தில் இவரின் மறைவு தொடர்பாக உரையாற்றுகையில்

மன்னார் மாவட்டத்தில் பேசாலையைச் சேர்ந்த முன்னாள் பாடசாலை அதிபர் ஞானமணி அன்ரன் பச்சேக் இன்றையத் தினம் (08.03.2022) இறைபாதம் அடைந்துள்ளார்.

இவர் தமிழரசுக் கட்சியின் ஓர் உறுப்பினராகவும் தந்தை செல்வா அவர்கள் மன்னாருக்கு வருகை தருகின்றபோது அவருக்காக ஒரு மேடை பேச்சாளராகவும் இருந்ததுடன் ஆரம்ப காலத்தில் யூலை கலவரத்தின்போது இவர் கொழும்புக்கு மக்களின் தேவைகள் கருதி வருகை தந்து சென்றவராகவும் திகழ்ந்தவருமாவார்.

ஆகவே நான் இந்த நேரத்தில் அவரின் மறைவுக்காக எனது அஞ்சலியை செலுத்தி நிற்கின்றேன் என பாராளுமன்றத்தில் இவ்வாறு அஞ்சலி உரையை ஆற்றினார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்.