தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம் !

தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் (புதன்கிழமை) திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சி பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.