கழகங்களுக்கு பதிவு சான்றிதழ் வழங்குதல்

(றியாஸ் இஸ்மாயில்)

அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கு கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் பதிவுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.எம்.அஜ்வத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.அஹமட் சாபீர், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஆர்.எம்.நழில், அம்பாறை மாவட்ட மாவட்டப் பயிற்றுவிப்பாளர் ஏ.சப்ரீன் நசார் கலந்து கொண்டு கழகங்களின் தலைவர் மற்றும் செயலாளர்களிடம் பதிவு சான்றிதழ்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில்,தீகவாபி பிரதேசங்களில் பதிவு செய்யப்பட்ட 34 கழகங்களில் இருந்து வருகை தந்த கழக பிரதிநிதிகளிடம் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட பதிவு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.