உற்பத்தித் திறன் தொடர்பான செயலமர்வு

(ஹஸ்பர்)

உற்பத்தித் திறன் தொடர்பான செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க இன்று (08) இடம் பெற்ற இவ் உற்பத்தித் திறன் தொடர்பான பயிற்சியினை திருகோணமலை மாவட்ட செயலகத்தின் உற்பத்தித் திறன் இணைப்பாளர் நுஸ்ரி வளவாளராக கலந்து பயிற்சியினை நடாத்தினார். அலுவலகத்தில் உள்ள பொது மக்கள் சேவை ;அலுவலக நடை முறை உள்ளிட்ட பல திறனாய்வு தொடர்பிலும் இதன் போது விழிப்புணர்வூட்டப்பட்டது.

இதில் உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, சமுர்த்தி வலய முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சித்திக் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.