தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்னால் தீப்பந்தம் ஏந்தி மாணவர்கள் போராட்டம் !

(நூருல் ஹுதா உமர்)

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்று இரவு பல்கலைக்கழக முன்னால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீப்பந்தம் மற்றும் சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தை தனியார் மயப்படுத்தல் மற்றும் புதிய மாணவர் அனுமதி போன்ற விடயங்களை முன்வைத்தும், பல்கலைக்கழகத்தை திறக்குமாறும் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்காக பஸ்களில் வந்திறங்கிய பல்கலைக்கழக மாணவர்கள் இரவு நேரம் என்றும் பாராது பங்கெடுத்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்