காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு மில்லியன் பெறுமதியான ஒட்சிசன் பிறப்பாக்கி இயந்திரங்கள் வழங்கி வைப்பு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு மில்லியன் பெறுமதியான 06 ஒட்சிசன் பிறப்பாக்கி இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு (05) திகதி மாலை 7.30 மணியளவில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கிவைக்கப்பட்ட குறித்த இயந்திரத்தை காத்தான்குடி பத்ரிய்யாஹ் ஜும்ஆப் பள்ளிவாயலின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் அவர்களிடம் கையளித்திருந்தனர்.

இந் நிகழ்வானது வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்றதுடன் பத்ரிய்யாஹ் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், தாதி உத்தியோகத்தர்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.