பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்திற்கு நுவரெலியாவில் மாபெரும் மக்கள் ஆதரவு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்க கோரும் கையெழுத்து போராட்டத்துக்கு நுவரெலியாவில் மாபெரும் மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்குவதற்கான கையெழுத்துப் போராட்டம் முதலில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இது வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் கொழும்பு என பல இடங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று மாத்தளையில் கையெழுத்து போராட்டம் இடம்பெற்ற நிலையில் இன்று நுவரெலியாவிலும் இடம்பெற்றுவருகின்றது.

இதன்போது பெருமளவிலான மக்கள் ஆதரவு தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.