சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும் எனும் தலைப்பில் இளம் தலைவர்களுக்கான ஒருநாள் பயிற்சி பட்டறை

(நூருள் ஹுதா உமர், பாறூக் ஷிஹான், எம்.என்.எம். அப்ராஸ்)

“சமூக அபிவிருத்தி பணிகளில் ஈடுபடும் இளம் பெண்களை ஊக்குவித்தலும், பங்கேற்பை அதிகரித்தலும்” எனும் தலைப்பில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில் இளம் பெண் தலைவர்கள் இணைந்து ஸ்டார் விங்ஸ் அமைப்பின் தலைவி எம்.எஸ். றக்ஸானா பானுவின் தலைமையில் ஒருநாள் செயலமர்வொன்று நற்பிட்டிமுனை தனியார் விடுதியொன்றில் இன்று (05) இடம்பெற்றது.

சேர்ச் போ கொம்மன் கிரவுண்ட் (Search for Common Groun D) அனுசரணையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக சமாதனம் மற்றும் சமூகப்பணி நிறுவன தேசிய இணைப்பாளர் த. தயாபரன், சேர்ச் போ கொம்மன் கிரவுண்ட் இந் கண்காணித்தல் மற்றும் கணக்கீட்டுக்கான பணிப்பாளர் எம்.ஐ. எம். சதாத் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை முன்னெடுத்தனர்.

இந்நிகழ்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் உத்தியோகத்தர்களான ஆர். அனுஸ்கா, யூ. எல். ஹபீலா, வழிகாட்டிகளான எம்.எம்.ஜே. பர்வின், கே. விஜயலக்ஸ்மி, எம்.எச்.எஸ்.ஆர். மஜீதியா, பி. ஜெனித்தா அடங்களாக இளம் தலைமுறை இளைஞர், யுவதிகள் பலரும் கலந்து கொண்டனர்.