100 மில்லியன் செலவில் சுத்தமான குடிநீர் திட்டம் – மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் சி.சந்திரகாந்தனினால் அங்குரார்ப்பணம்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கு அமைவாக அனைவருக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துவரும் நிலையில், அதற்கு அமைவாக 100 மில்லியன் ரூபா செலவில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கல்குடா, பாசிக்குடா மற்றும் பட்டியடிச்சேனை போன்ற 18 கிலோமீட்டருக்கும் அதிகமான பிரதேசங்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகத் திட்டத்தினை நேற்றையதினம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தனினால் அங்குரார்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகளின் போது தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர், கோறளைப்பற்று பிரதேசசபை தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித், பிரதேச சபை உறுப்பினர்கள், துறைசார் அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.