ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடை விழா

(க.ருத்திரன்)

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட மஞ்சள் அறுவடை விழா இன்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் உதவிப் பிரதேச செயலாளர் கே.அமலினி தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக வளாகத்தில் கடந்த யூன் 2021 ஆம் ஆண்டு அப்போது பிரதேச செயலாளராக கடமையாற்றிய கே.தனபாலசுந்தரத்தின் ஆலோசனையின் பேரில் இவ் மஞ்சள் உற்பத்தியானது மேற்கொள்ளப்ட்டது.இவ் மஞ்சள் உற்பத்தி நடவடிக்கையில் பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகஸ்த்தர் ஆர்.கங்காதரன் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.

வேள்ட்; விஷன நிறுவனமும் மஞ்சள் நடுவதற்கான பங்களிப்பினை வழங்கியிருந்தது.இந் நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருனாகரன் ஆகியோர்கள் இவ் அறுவடை விழாவில் கலந்து கொண்டனர்.