சாய்ந்தமருது ஹொலிஹீரோஸ் விளையாட்டுக் கழகத்திற்கு காற்பந்தாட்ட சீருடை வழங்கி வைப்பு

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழக காற்பந்தாட்ட சீருடை அறிமுக நிகழ்வு அண்மையில் கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் போசகரும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்க தலைவரும் , முபாறக்ஸ் டெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எஸ்.எம்.முபாறக் பிரதம அதிதியாக கலந்து .கொண்டு காற்பந்தாட்ட சீருடைகளை கழக முக்கியஸ்தர்களிடம் கையளித்தார்.

சர்வதேச ரீதியில் பங்கேற்று அம்பாறை மாவட்டத்திற்கும் , கல்முனை பிரதேசத்திற்கும் , சாய்ந்தமருதிற்கும் புகழ் சேர்த்த சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழக மூன்று வீர்ர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வின் போதே இச் சீருடைகள் வழங்கி வைக்கப்பட்டன.