சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றி வளைப்பு, வவுணதீவு பகுதியில் சம்பவம்.

சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் நேற்றைய தினம்(28) கொக்கட்டிச்சோலை காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சாமந்தியாறு பகுதியில் நீண்டகாலமாக செயற்பட்டு வந்த சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டதாக கொக்கட்டிச்சோலை காவல் துறை அதிகாரி நலீன் குணவர்த்தன தெரிவித்தார்.

விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபட்ட நபர்கள் தப்பி ஓடியுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 3960000 மில்லி லீட்டர் கோடா நிரம்பிய 22 பரல்களும், 100,000 மில்லி லீட்டர் நிரம்பிய 04 கொள்கலன்களும், உற்பத்திக்கான உபகரணங்கள் 04 சுருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளமையினால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக மேலும் தெரிவித்தார்.