கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலாளராக நியமிக்கப்பட்டசித்திரவேலின் இடமாற்றம் ரத்து.

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலாளராக இன்று முதல் நியமிக்கப்பட்ட க.சித்திரவேலின் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அரசசேவைகள் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இடமாற்றங்களின் பிரகாரம்  தற்போது கிழக்கு மாகாண கல்வியமைச்சில் மேலதிக செயலாளராக பணிபுரியும்   க.சித்திரவேல்(சட்டத்தரணி) இன்று முதல் கோறளைப்பற்று மத்தி பிரதேசசெயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது  பிரதேச செயலாளராககடமையாற்றும் எஸ். எச் முஸமில் கிழக்கு மாகாணசபைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். ஆனால் இவ்இடமாற்றம் கடந்த 22ம் திகதி பொதுச்சேவை ஆணைக்குழுவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் முஸ்லிம் பிரதேச செயலகம் ஒன்றுக்கு தமிழர் ஒருவர் பிரதேச செயலாளராக நியமிக்கப்படவுள்ளார் இதனை ரத்து செய்ய வேண்டுமென முஸ்லிம் அரசியல்வாதிகளும் பல பொது அமைப்புக்களும் பொதுவெளியில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.