துறைசார் சேவைக்காக யஹ்யாகானுக்கு கௌரவ கலாநிதி பட்டம்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

யஹியாகான் குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிப் பொருளாளருமான ஏ.சி.யஹியாகான் சிறந்த முகாமைத்துவம் மற்றும் வியாபாரத்துக்கான கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Globel Peace University ஏற்பாட்டில் வெள்ளவத்தை சபயர் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற வைபவத்தின்போதே அவர் இவ்வாறு கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் கலாநிதி எஸ்.சந்திரசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கௌரவ கலாநிதி பட்டச் சான்றிதழை வழங்கி வைத்தார்.

இதன்போது ஏ.சி.யஹியாகான் உட்பட 15 முக்கிய பிரமுகர்களை, அவர்களது துறைசார்ந்த சேவைக்காக Globel Peace University கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.