மெழுகுவர்த்தியால் தீயில் கறுகிய பொருட்கள்!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

மின்சாரம் தடைப்பட்ட வேளை மெழுகுவர்த்தி ஏற்றி வைத்த போது அதன் தீப்பொறி வீட்டுப் பொருட்களில் பட்டு பொருட்கள் எரிந்துள்ள சம்பவமொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை ஹாஜியார் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமது வீட்டு அறையொன்றில் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு வேறு அறையில் தாம் இருந்த போது மெழுகுவர்த்தி விழுந்து தீப்பற்றியதில் வீட்டுப் பொருட்கள் எரிந்துள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

தீயை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததினால் பெரும் ஆபத்திலிருந்து தப்பிக் கொண்டதாக வீட்டு உரிமையாளர்கள் மேலும் தெரிவித்தனர்.