மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவினால் 75 மரக்கன்றுகள் நடப்பட்டன

அதிமேதகு ஜனாதிபதியின் எண்ணக்கருவில் தோன்றிய சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக எதிர் வரும் 75 வது தேசிய தினத்திற்கு முன்பதாக நாடு பூராகவும் 7500000 மரக்கன்றுகளை நடும் செயற்த்திட்டம் நடை முறைப்படுத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் தகவல் திணைக்களத்தின் ஊடக பிரிவினரினால் நிழல் தரும் மரங்கள் நேற்று வாவிக்கரை வீதி அருகில் நடப்பட்டது.

இதன் மூலம் எமது ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தை நடை முறை படுத்தியதுடன் தேசிய ரீதியில் பயன் தரு மரங்கள் நாடு பூராகவும் அரசினால் நாட்டி வருகின்றமை குறிப்பிடத்தகத்துக்கும்.