மஹா சிவராத்திரி தினத்தன்று அடியார்கள் தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சந்தர்ப்பம் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில்

(தேற்றாத்தீவு)

மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள் தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் எதிர்வரும் செவ்வாய்ககிழமை (01) சிறப்பாக நடைபெற உள்ளன. கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்திற்கு சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டு வரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர் லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய பாலாறு ‘பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்த நீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு காலை தொடக்கம் பின்னிரவு வரை இடம் பெறும்.

இதன் போது தங்களது ராசிகளுக்குரிய அபிஷேக திரவியங்களாலும் அபிஷேகம் பண்ணுவதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.அந்த வகையில் மேஷ ராசி வெல்லம் கலந்த நீர் ரிஷப ராசி தயிர் மிதுன ராசி கரும்பு கடகராசி சர்க்கரை சேர்ந்த பால் சிம்ம ராசி கன்னி ராசி பால் அல்லது நீரால் துலாம் ராசி பசும்பால்.விருச்சக ராசி தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் தனுசு ராசி குங்குமப்பூ கலந்த பால்.மகர ராசி நல்லெண்ணெய் கும்ப ராசி இளநீர் அல்லது கடுகு எண்ணெயை.மீனராசி குங்குமப்பூ பால் ஆலயத்தில் நான்கு சாமப் பூஜைகளும் லிங்கோற்பவர் காலத்தில் ஏகாதச ருத்ர மஹா வேள்ளியும் இடமபெறவுள்ளமையும் குறிப்பிடதக்கவிடயம்.மாலை 6 மணி தொடக்கம் அதிகாலைவரை பஜனைஇ சங்கீதக்கச்சரிஇ நடனம்இ கதாப்பிரசங்கம்இ சமய பேருரைகள் என்பன இடம் பெறும். என ஆலய பரிபான சபையின் தலைவர் த.விமலானந்தராஜா தெரிவித்தார்.